Cholan Social Service Award Is Given To Mrs.K.Mahalakshmi [Teacher of GTR High School,Arasaveli, Jawvathu Malai, Thiruvannamalai Dist, Tamil nadu, India
Cholan Social Service Award Is Given In Recognition To His Commitment To The Social Services,Social Harmony, Social Justice For The Common People, Creating Awareness, Living With Humanity And For The Best Possible Service In The Field That He Is Engaged.
The CBWR Organization Is Take This Opportunity To Thanks To Everyone Who Participated In This Event.
க.மகாலட்சுமி கண்ணன், Bsc, BEd., (ஆசிரியை),GTR மேல்நிலைப்பள்ளி,அரச வேலி, ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னையே அர்ப்பணி என்ற வாசகத்தை மெய்யாக்கிய ஆசிரியை.
தாய்மை உள்ளத்தோடு தனது பணியை செவ்வனே செய்து வரும் மனிதநேய மாண்பாளர். எல்லா பெற்றோர்களினதும் கனவுகளை மெய்ப்பிக்கவென பிறந்திருக்கும் நம்பிக்கை.
மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரும் பள்ளியில் தனக்கான பணி நியமனம் செய்யப்பட்ட போதிலும் மகிழ்ச்சியுடன் அங்கு சென்றபோது அப்பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாமல் இருந்தது இந்த ஆசிரியைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் அதி தீவிர முயற்சியினால் இன்று அப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ள அதேவேளை 400ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்போது அங்கு கல்வி கற்று வருகிறார்கள். தனது உணர்வுபூர்வமான தன்னம்பிக்கையான உரை மூலம் மாணவ மாணவிகளை பள்ளியில் இணைய வைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி (முடி வெட்டி விடுதல், குளிப்பாட்டி விடுவது, உணவு ஊட்டி விடல்) கல்வியை கனிவோடும் கவனத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் வருங்கால இந்தியாவின் தூண்களான மாணவ மாணவிகளுக்கு கற்பித்து,கருணையும் காட்டி வரும் மனிதநேய ஆசிரியைக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த விருதை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட தலைவர் Amb.M.ஜெயசீலன்,அவருடைய தவப்புதல்வன், மற்றும் செயலாளர் திரு.வெங்கடேஷ், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. குப்புசாமி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு. பிரசன்னா போன்றோருக்கு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், விருப்பத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் 340 Km தூரம் பயணம் செய்து அந்த ஆசிரியைக்கு விருது வழங்கி கௌரவித்தமைக்காக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமைச் செயற்குழு இவர்கள் அனைவரது செயற்பாட்டையும் வாழ்த்தி வரவேற்கிறது.