கொரோணோ தொற்றுநோய் காரணமாக கிடைத்த பள்ளி விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நினைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களான மா.அதிதியா, ச.வைனேஷ், ம.அவந்தியன், ச.தியா, ச.சஸ்வந்த் போன்றோர் இணைந்து இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை வெளிநாட்டில் வசிக்கும் தமது தாத்தாவின்( சேவுகப்பெருமாள்) அனுமதியுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்த இவர்கள், இயற்கை விவசாய விஞ்ஞானியான திரு. நம்மாழ்வார் அவர்களின் காணொளிகள் மூலமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், 11ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வேளாண்மை எனும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலும் இயற்கை உரங்களை தாங்களாகவே உற்பத்தி செய்து பயன்படுத்தி நெல் மற்றும் தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டு வளர்த்து இன்று இயற்கை விவசாயத்தில் வெற்றி கண்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும், ஒரு நன்நீர் மீன் வளர்ப்பு குட்டை அமைத்து அதில் ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்த்து இன்று அவற்றில் பலனடைந்துள்ளார்கள். விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்தை பலரும் கைவிட்டு மறந்து வரும் நிலையில், இந்தப் பள்ளி மாணவர்களின் முயற்சியானது பலரை இயற்கை விவசாயத்தின் மேல் ஈர்ப்பை(ஆர்வத்தை) ஏற்படுத்தச் செய்துள்ளது.
இவர்களின் ஆக்கபூர்வமான இந்த முயற்சியை பாராட்டி ஊக்கப் படுத்தும் நோக்கத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் ஞாயிறு அன்று (06-12-2020) சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் வைத்து சோழன் இளம் விவசயப் புரட்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவகங்கை நகர வருவாய்த்துறையின் வட்டாட்சியர் செல்வி.மயிலாவதி, சிவகங்கை மாவட்ட அரசு கருவூல கண்காணிப்பாளர் மணிக்குமார்,
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் தஆர்த்திகா நிமலன், பொது முகாமையாளர் பிரபு, துணை முகாமையாளர் நவீன் சேதுபதி, இந் நிறுவனத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மருத்துவர் கஜேந்திரன்,
உழவர் உதவும் கரங்களின் மாநில. பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.