சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று ஆற்றிய வளர்ச்சிப் பணிகள் அளவிடற்கரியது
மாண்புமிகு ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்களின் செயலாண்மைப் பங்களிப்பால் சிவகங்கை மாவட்டத்திற்கானப் பலனாக , நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, மேம்பட்ட உழவர் வாழ்வாதாரம், கால்நடைகளுக்கானத் தீவனம், பல்லுயிர் பெருக்கம் என்பன. துணிச்சலாக, சமரசமற்று ஆக்கிரமிப்பு கண்மாய்களை மீட்டெடுத்தும், (6900) ஆறாயிரத்து தொள்ளாயிரம் வரத்துக் கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தும், அவைகளில் (90) தொண்ணூறு விழுக்காடு நீர் நிறைந்து இன்றும் காணப்படுவது, செயற்கரியச் செயலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
மாண்புமிகு ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்கள், தன்னை நாடி வருவோரை பண்போடு வரவேற்று அன்போடு விசாரித்து அவர் தம் குறைகளை விரைவாக தீர்த்து வைப்பதில் வல்லவர். கனிவாக, மக்களுடைய குறைகளை பொறுமையாகக் கேட்டறிய விரும்புவதால் உறக்க நேரத்தையும் இழக்கிறார் கனிசமாக, என்பதே அன்னார் தம் மனித நேயத்திற்கான வெளிப்பாடாகும்
மாண்புமிகு ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்கள், அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் விதத்தில் வீடற்றோருக்கு வீடு கட்டிக் கொடுத்தல், சுய தொழிலுக்கான வங்கிக் கடனுதவிப் பெற வழி செய்தல், தேர்வுகளிலும், போட்டிகளிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளையும் உதவிகளையும் அளித்து ஊக்கப்படுத்தியும், தகுதியானோரை தேர்வு செய்து உருவாகும் வெற்றிட வேலைவாய்ப்பினைப் பெற உதவியும், அரசுப் பணிகளுக்கான தகுதித் தேர்வுகளுக்கு கற்கவும் சிறார் விளையாடி மகிழவும் பூங்கா அமைத்தும் வளர்ச்சிப் படிநிலை அமைத்துக் கொடுத்தார்.
மாண்புமிகு ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்கள், அரபு நாட்டு பாலை வனங்களில் அடிமைகளைப் போல் இன்னல் தாங்கிப் பணி செய்தோரை உரிய முறையில் மீட்டெடுத்து மனிதநேயம் காத்தார்.
இவர் சிவகங்கை மாவட்டத்திற்காற்றிய பணிகளைப் பிராட்டி மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்களும் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் வெகுவாகப் பாராட்டியது.
மாண்புமிகு ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., அவர்களின் பொற்கரங்களினால் தொடங்கப்பட்டதே நமது சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவனம். கணக்கற்ற பல்வேறுச் குமுகாயத் தொண்டுகளினால் விரிவடைந்து இன்று (26) இருபத்தியாறு நாடுகளில் பெருமைமிகு கிளைகளுடன் வளர்ந்து வருகிறது.
நுண்மாண் நுழைபுலம் மிக்கவரும்,
மனிதநேய மாண்பாளருமான, இவருடைய அனைத்து பணிகளின் சிறப்புகளையும் நேரடியாகக் கண்டறிந்த நிறுவனம் என்ற அடிப்படையில் இந்த பாராட்டுச் சான்றுதழ் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.