Cholan Social Service Award Was Issued to Dr.A.Manivannan ACP (Assistant Commissioner of Police) Madurai, Tamil nadu, India. Congratulations for deserved this recognition from CBWR
பகலில் காவலர், இரவில் எழுத்தாளர், என்று காவல்துறையினரால் புகழ்ந்து பேசப்படும் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது.
இவரை அறிமுகம் செய்து உடன் வந்து நிகழ்வை சிறப்பித்தார் மூத்த வழக்கறிஞர் உயர்திரு. RMK. ராம்பிரபாகர் அண்ணா அவர்கள்.
மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் முனைவர் திரு.A.மணிவண்ணன் அவர்களின் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர் முயற்சியினால் ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள இவர்
இதுவரை 250 அனாதைப் பிணங்களை தானே முன்னினன்று நல்லடக்கம் செய்துள்ளார். இவர் மதுரை மாநகரில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தியமையை பாராட்டி மதுரை மாநகர கூடுதல் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவர்கள் இவருக்கு பணப் பரிசளித்து பாராட்டியுள்ளார்.
ஓய்வு நேரத்தை புத்தக வாசிப்பிற்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டதினால் 2011 ஆண்டு திருச்சி பாரதிதாசன் கல்லூரியினால் 'தமிழ்நாடு அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் பெண் உரிமைகளுக்கான பங்கு' என்ற தலைப்பில் இவர் சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சித் தொகுப்பிற்காக வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய இந்திய ஆய்வியல் நிறுவனமும் இணைந்து 500 அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை சுயசரிதையை நூலாக வெளியிட்டுள்ளது. அங்கு வைத்து இவரது சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பணி நிறைவு காலத்தின் பின்னர், தனித் தமிழ் ஆர்வமுடைய தனது தாயாரின் பெயரான திருமதி K.R. செல்லம்மாள் உலகத் தமிழாராய்ச்சி மையம் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி பல அறிஞர்களை இணைத்து ஆண்டு தோறும் கருத்தரங்கங்கள் நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பயன் பெற அனுமதிப்பது, மாணவ/மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க உதவுவது என்று பல ஆக்கபூர்வமான செயல்களுக்காக இப்போதே 4000ற்கும் மேற்பட்ட புத்தகங்களை தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார். இவரது அனைத்து ஆக்கபூர்வமான சேவைகளையும் பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொதுத் தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை MD, நிறுவனர் முனைவர்.நிமலன் நீலமேகம், வழக்கறிஞர் ராம்பிரபாகர், பொது முகாமையாளர் தபி பிரபு, தென் மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்ட தலைவர் சண்முகவேல், செயலாளர் சித்த மருத்துவர் கஜேந்திரன் மற்றும் புத்தகக் கடை முருகன் போன்றோர் கலந்து சிறப்பித்த அதேவேளை இந் நிறுவனத்தின் பல நாடுகளின் தலைவர்கள், மாநில, மண்டல ,மாவட்ட மற்றும் தாலுகா ரீதியிலான தலைவர்கள் என பலரும் விருது பெற்ற காவல் உதவி ஆணையரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.
இத்துடன் CBWR சார்பாக 100 காவலர்களுக்கு மிகவும் சுவையான மூலிகைத் தேனீரும் தமிழர் பாரம்பரிய வாழைப்ழ சிற்றுண்டியும் வழங்கப்பட்டது
|